ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை!
ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நியூ சண்டீகரில் நேற்று (மே 29) நடைபெற்ற குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 47 பந்துகளில் 96 ரன்கள் (8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) எடுத்து அசத்தினார்.
Advertisement
Advertisement
நேற்றையப் போட்டியில் 96 ரன்கள் எடுத்தன் மூலம், ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்தார். அவர் 23 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையைப் படைத்துள்ளார். பந்துகள் அடிப்படையில் குறைந்த பந்துகளில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அவர் 440 பந்துகளில் 1000 ரன்களைக் கடந்து இந்த சாதனையைப் படைத்தார்.
ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1000 ரன்கள் குவித்தவர்கள்
ஷான் மார்ஷ் - 21 இன்னிங்ஸ்களில்
லெண்டல் சிம்மன்ஸ் - 23 இன்னிங்ஸ்களில்
வைபவ் சூர்யவன்ஷி - 23 இன்னிங்ஸ்களில்
டெவான் கான்வே - 24 இன்னிங்ஸ்களில்
மேத்யூ ஹைடன் - 25 இன்னிங்ஸ்களில்
சாய் சுதர்சன் - 25 இன்னிங்ஸ்களில்
ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1000 ரன்கள் குவித்தவர்கள் (குறைந்த பந்துகளில்)
வைபவ் சூர்யவன்ஷி - 440 பந்துகளில்
ஆண்ட்ரே ரஸல் - 545 பந்துகளில்
டிம் டேவிட் - 560 பந்துகளில்
டிராவிஸ் ஹெட் - 575 பந்துகளில்
பில் சால்ட் - 575 பந்துகளில்
ஹென்ரிச் கிளாசன் - 594 பந்துகளில்
வீரேந்திர சேவாக் - 604 பந்துகளில்
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 16 போட்டிகளில் 776 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.