ஷமியிடம் போலீஸார் 3 மணி நேரம் விசாரணை
தில்லி அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியிடம் கொல்கத்தா போலீஸார் புதன்கிழமை 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
தில்லி அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியிடம் கொல்கத்தா போலீஸார் புதன்கிழமை 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
தன்னை துன்புறுத்தியதாகவும், முகநூலில் பல்வேறு பெண்களுடன் தவறான முறையில் பழகியதாகவும், முகமது ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான் கொல்கத்தா போலீஸில் புகார் செய்திருந்தார். அதன்படி ஷமி, அவரது குடும்பத்தினர் மீது ஜாதவ்பூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தன் மீதான புகார்களை ஷமி மறுத்திருந்தார்.
இதற்கிடையே விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு போலீஸார் அழைப்பாணை அனுப்பி இருந்தனர். இதனால் தில்லி அணியுடன் செவ்வாய்க்கிழமை பெங்களூரு செல்ல வேண்டிய ஷமி செல்லாமல் கொல்கத்தாவிலேயே தங்க நேரிட்டது. அதன்படி புதன்கிழமை காவல்துறை தலைமையகத்தில் ஷமி விசாரணைக்காக ஆஜரானார்.
அவரிடம் 3 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.