துளிகள்....
துளிகள்....
ஹிமாசலப்பிரதேச அணிக்கு எதிராக தரம்சாலாவில் நடைபெற்ற எலைப் பி பிரிவு ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் தமிழகம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. முதல் இன்னிங்ஸில் தமிழகம் 227, ஹிமாசல் 463 ரன்களை எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் தமிழகம் 345, ரன்களை எடுத்தது. ஹிமாசல் 111 ரன்களை எடுத்து வென்றது.
பிரபல விளையாட்டு வீரர்களான விராட் கோலி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, செளரவ் கங்குலி, பி.வி.சிந்து, மைக்கேல் வாகன் உள்ளிட்டோர் சமூக வலைதளங்கள் மூலம் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பதிவிட்டுள்ளனர். கோலி கிறிஸ்துமஸ் கேக்குடனும், ரொனால்டோ தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் உடையிலும் படங்களை பதிவிட்டுள்ளனர்.
இந்த பூமியிலேயே சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி திகழ்கிறார் என ஆஸி. முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே புகழ்ந்து கூறியுள்ளார். மெல்போர்னில் இரண்டு தரமான அணிகள் மோதுகின்றன. அதே நேரத்தில் சிறந்த வீரர் கோலியும் ஆடுவதால் புதன்கிழமை சிறப்பானது எனவும் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.