சாதனை நாயகன் விராட் கோலி பிறந்த நாள்: கடவுளுக்கு நன்றி என அனுஷ்கா சர்மா வாழ்த்து
சாதனை நாயகனும், இந்திய கிரிக்கெட் அணி கேப்டனுமான விராட் கோலி திங்கள்கிழமை தனது 30-ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.
சாதனை நாயகனும், இந்திய கிரிக்கெட் அணி கேப்டனுமான விராட் கோலி திங்கள்கிழமை தனது 30-ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.
கடந்த 1988 நவம்பர் 5-ஆம் தேதி பிறந்த விராட் கோலிக்கு 29 வயது நிறைவடைந்துள்ளது.
பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான கோலி பிறந்த நாளை மனைவி அனுஷ்கா சர்மாவுடன் ஹரித்வாரில் கொண்டாடினார். முதலில் அவருக்கு ஜாம்பவான் சச்சின் சுட்டுரையில் (டுவிட்டர்) பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் பிசிசிஐ, விவிஎஸ்.லக்ஷ்மண், விரேந்தர் சேவாக், முகமது சமி, ரித்திமன் சாஹா, முகமது கைஃப், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், புஜாரா, ஆப்கன் ஸ்பின்னர் ரஷீத் கான், என பலரும் கோலி பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா, அவர் பிறந்ததற்காக கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற மே.இ.தீவுகள் உடனான ஒரு நாள் தொடரில் தான் உலகிலேயே அதிவிரைவாக 10,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார் கோலி. சச்சின் சாதனையான 259 இன்னிங்ஸ் என்பதை 205 இன்னிங்ஸில் கடந்து சாதனை படைத்தார் கோலி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.