முகப்பு
செய்திகள்

தில்லி ரஞ்சி அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார் கெளதம் கம்பீர்

தில்லி ரஞ்சி அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார் மூத்த வீரர் கெளதம் கம்பீர்.

Updated On : 6 நவம்பர் 2018, 12:56 am IST
பகிர்:


தில்லி ரஞ்சி அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார் மூத்த வீரர் கெளதம் கம்பீர்.
இந்தியஅணியின் வெற்றிகரமான வீரராக இருந்த கம்பீர் பேட்டிங் திறன் குறைந்ததை அடுத்து தேசிய அணியில் இடம் பெற முடியவில்லை. ஐபிஎல் மற்றும் தில்லி மாநில அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். தில்லி ரஞ்சி அணியின் கேப்டனாகவும் பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில் இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் கேப்டன் பதவியை விட்டு விலகுவதாக கம்பீர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தேர்வு குழுத் தலைவர் அமித் பண்டாரிக்கு எழுதிய கடிதத்தில் கேப்டன் பதவியில் இருந்து விலகவிரும்புகிறேன். அப்பொறுப்புக்கு இளம் வீரரை நியமிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் 24 வயதான நிதிஷ் ராணா கேப்டனாகவும், 26 வயது துருவ் ஷோரே துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 
கெளதம் கம்பீர் தலைமையில் தில்லி அணி விஜய் ஹஸாரே கோப்பை இறுதிச்சுற்றுவரை முன்னேறியது. இதில் 500 ரன்களுக்கு மேல் அவர் விளாசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தாவில் இருந்து தில்லி டேர் டெவில்ஸ் அணியில் கம்பீர் இணைந்தும் சோபிக்க முடியவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments