முகப்பு
செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன்: முதல் சுற்றில் ஆன்டி முர்ரே தோல்வி!

மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் ஆன்டி முர்ரே முதல் சுற்றில்...

Updated On : 14 ஜனவரி 2019, 6:00 pm IST
பகிர்:

மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் ஆன்டி முர்ரே முதல் சுற்றில் தோல்வியடைந்துள்ளார். 

இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் 6-4 6-4 6-7(5) 6-7 (4) 6-2 என்கிற செட் கணக்கில் முர்ரேவைத் தோற்கடித்தார் ராபர்டோ பெளடிஸ்டா. இதையடுத்து தனது கடைசி டென்னிஸ் ஆட்டத்தை முர்ரே விளையாடியுள்ளார் என்று அறியப்படுகிறது.

ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டிக்கு பின் ஓய்வு பெறவுள்ளதாக ஆன்டி முர்ரே அறிவித்துள்ளார். இடுப்புக் காயத்தால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துள்ள நிலையில் தன்னால் தொடர்ந்து ஆட முடியவில்லை. எனவே ஆஸி. ஓபன் போட்டிக்கு பின் ஓய்வு பெறவுள்ளேன் என உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே சமீபத்தில் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments