ஆசிய பாட்மிண்டன் கவுன்சில் துணைத் தலைவராக ஹிமந்த விஸ்வ சர்மா தேர்வு
ஆசிய பாட்மிண்டன் கவுன்சில் துணைத் தலைவராக இந்திய பாட்மிண்டன் சங்கத் தலைவர் ஹிமந்த விஸ்வ சர்மா (50) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆசிய பாட்மிண்டன் கவுன்சில் துணைத் தலைவராக இந்திய பாட்மிண்டன் சங்கத் தலைவர் ஹிமந்த விஸ்வ சர்மா (50) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மொத்தமுள்ள 40 வாக்குகளில் 35 வாக்குகளை பெற்று அவர் துணைத் தலைவரானார்.
இதுகுறித்து இந்திய பாட்மிண்டன் சங்க பொதுச் செயலர் அஜய் சிங்கானியா கூறுகையில், "ஹிமந்த விஸ்வ சர்மா ஆசிய பாட்மிண்டன் கவுன்சில் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இந்தியாவில் பாட்மிண்டன் வளர்ச்சிக்கு பல உதவிகள் கிடைக்கும்' என்றார்.
அஸ்ஸாம் மாநில சுகாதாரத் துறை அமைச்சரான ஹிமந்த விஸ்வ சர்மா, கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இந்திய பாட்மிண்டன் சங்கத் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.