முகப்பு
செய்திகள்

தைபே ஓபன்: இந்தியாவின் ஆட்டம் நிறைவு

தைபே ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய போட்டியாளா்கள் அனைவரும் காலிறுதியில் வியாழக்கிழமை தோல்வியைத் தழுவினா்.

Updated On : 23 ஜூலை 2022, 3:54 am IST
பகிர்:

தைபே ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய போட்டியாளா்கள் அனைவரும் காலிறுதியில் வியாழக்கிழமை தோல்வியைத் தழுவினா்.

போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த பி.காஷ்யப், 12-21, 21-12, 17-21 என்ற கேம்களில் மலேசியாவின் சூங் ஜு வென்னிடம் வெற்றியை இழந்தாா்.

மகளிா் இரட்டையரில் தனிஷா கிராஸ்டோ/ஷ்ருதி மிஸ்ரா ஜோடி 16-21, 22-20, 18-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் ஹாங்காங்கின் நிக் டஸ் யு/சாங் ஹியு யானிடம் தோல்வியடைந்தனா்.

Advertisement

Advertisement

கலப்பு இரட்டையரில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த இஷான் பட்நாகா்/தனிஷா கிராஸ்டோ கூட்டணி 19-21, 12-21 என்ற கேம்களில் மலேசியாவின் ஹு பாங் ரோன்/தோ இ வெய் இணையிடம் வீழ்ந்தனா்.

இப்போட்டியில், பி.வி.சிந்து, பிரணாய் உள்ளிட்ட பிரதான போட்டியாளா்கள் எவரும் பங்கேற்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments