உலகக் கோப்பை தொடரிலிருந்து ஹார்திக் பாண்டியா விலகல்!
இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார்.
உலகக் கோப்பையின் இந்தியா - வங்கதேச போடியின்போது பந்தினை தடுத்தபோது கணுக்காலில் அடிபட்டதால் ஹார்திக் பாண்டியா ஆடுகளத்தை விட்டு வெளியேறி அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் ஃபீல்டிங்குக்கு வந்தார்.
இந்திய அணி முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் சோகமான செய்தி ரசிகர்களை வந்தடைந்துள்ளது.
இதையும் படிக்க: வில்லியம்சன் கம்பேக்: வாழ்வா-சாவா ஆட்டத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சு!
Advertisement
Advertisement
காயம் குணமாக அதிக நாள்கள் ஆகுமென்பதால் உலகக் கோப்பை தொடரிலிருந்து ஹார்திக் பாண்டியா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா இந்திய அணியில் இல்லாதது மிகப்பெரிய இழப்பென பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.