ரைபகினா, கௌஃப் அதிர்ச்சித் தோல்வி; பொடாபோவா, சின்னர் வெற்றி
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான எலனா ரைபகினா, கோகோ கெüஃப் ஆகியோர் அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து செவ்வாய்க்கிழமை வெளியேறினர்.
மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், கஜகஸ்தானை சேர்ந்தவரும், உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையுமான ரைபகினா 6-7 (8/10), 4-6 என்ற நேர் செட்களில், 56-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரியாவின் அனஸ்தாசியா பொடாபோவாவிடம் வீழ்ந்தார்.
இருவரும் மோதியது இது 2-ஆவது முறையாக இருக்க, பொடாபோவா 1-1 என கணக்கை நேர் செய்திருக்கிறார். இந்த வெற்றியின் மூலமாக அவர், 1000 புள்ளிகள் கொண்ட டபிள்யூடிஏ போட்டியில் 4-ஆவது முறையாக காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறார்.
Advertisement
காலிறுதியில் பொடாபோவா, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை சந்திக்கிறார். 2 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனும், அமெரிக்கருமான கோகோ கெüஃப் 4-6, 6-1, 6-7 (5/7) என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 13}ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவாவிடம் தோல்வியுற்றார்.
இருவரும் மோதியது இது 3-ஆவது முறையாக இருக்க, நோஸ்கோவா தனது முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார். நோஸ்கோவா தனது காலிறுதியில், உக்ரைனின் மார்த்தா கொஸ்டியுக்குடன் மோதுகிறார்.
26-ஆம் இடத்திலிருக்கும் கொஸ்டியுக் முந்தைய சுற்றில், 6-2, 6-3 என்ற நேர் செட்களில், அமெரிக்காவின் கேட்டி மெக்னாலியை வென்றார். இதனிடையே காலிறுதியில், உலகின் 8-ஆம் நிலை வீராங்கனையான ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா 7-6 (7/1), 6-3 என்ற நேர் செட்களில், போட்டித்தரவரிசையில் 24-ஆம் இடத்திலிருக்கும் கனடாவின் லெய்லா ஃபெர்னாண்டûஸ வென்றார்.
சின்னர் வெற்றி; முசெத்தி தோல்வி: இப்போட்டியின் ஆடவர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னர் 6-2, 7-5 என, போட்டித்தரவரிசையில் 19-ஆம் இடத்திலிருந்த பிரிட்டனின் கேமரூன் நோரியை தோற்கடித்தார்.
6-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் முசெத்தி 3-6, 3}6 என்ற நேர் செட்களில், 11-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவிடம் தோல்வி கண்டார். லெஹெக்கா தனது காலிறுதியில் பிரான்ஸின் ஆர்தர் ஃபில்ஸýடன் மோதுகிறார்.
21-ஆம் இடத்திலிருக்கும் ஃபில்ஸ் 6-3, 6-4 என, ஆர்ஜென்டீனாவின் தாமஸ் எட்செவெரியை சாய்த்தார். 23-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக் 6-4, 7-6 (13/11) என்ற செட்களில், 13-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் காரென் கச்சனோவை சாய்த்தார்.
2-ஆம் இடத்திலிருக்கும் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் 6-3, 7-6 (7/2) என பிரான்ஸின் டெரென்ஸ் அட்மேனை வெல்ல, 3-ஆம் இடத்திலிருந்த கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகர் அலியாசிமே 6-7 (3/7), 3-6 என பெல்ஜியத்தின் அலெக்ஸாண்டர் பிளாக்ஸிடம் தோல்வியுற்றார்.