முகப்பு
செய்திகள்

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அசத்தல் வெற்றி குறித்து...

Updated On : 30 ஏப்ரல், 2026 at 3:44 PM
அணியினர் அடித்த முதல் கோலின் போது மகிழ்ச்சியில் ரொனால்டோ. - AFP
பகிர்:

சௌதி புரோ லீக்கில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 970ஆவது கோலை நிறைவு செய்தார். அத்துடன் அவரது அணி முக்கியமான வெற்றியையும் பெற்றது.

மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து விலகிய ரொனால்டோ சௌதீ லீக்கில் 2023 முதல் அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார்.

சௌதி புரோ லீக்கில் அல்-நாசர் அணியும் அல்-அஹ்லி அணியும் நேற்று மோதின. இதில் 2-0 என அல்-நாசர் அணி வென்றது. இதில் ரொனால்டோ 76ஆவது நிமிஷத்தில் கார்னர் கிக்கில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார்.

Advertisement

இந்த வெற்றியுடன் கோப்பை வெல்லும் வாய்ப்பை அல்-நாசர் அணி அதிகரித்துள்ளது. அல் - ஹிலால் அணியை விட 8 புள்ளிகள் முன்னிலை வகித்துள்ளது.

2 ஏஃப்சி சாம்பியன்ஷிப் கோப்பை வென்றதால் அல்-அஹ்லி ரசிகர்கள் ரொனால்டோவை ’கோப்பை இல்லை’ என கிண்டல் செய்தார்கள். இதற்கு, ‘’என்னிடம் 5 சாம்பியன்ஷ் லீக் கோப்பை இருக்கிறது” என சைகையில் பதில் அளித்தார்.

summary

Laughing Cristiano Ronaldo makes hand gesture & shouts up to Al Ahli fans targeting him with abuse after crucial Al-Nassr win and 970 goals

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.