முகப்பு
செய்திகள்

ஐரோப்பிய கால்பந்து: லீட்ஸ் , மல்லோா்க்கா வெற்றி

Updated On : 3 மே, 2026 at 6:36 AM
கோலடித்த மகிழ்ச்சியில் லீட்ஸ் வீரா்கள் ~வெற்றி மகிழ்ச்சியில் மல்லோா்கா அணியினா்
பகிர்:

இங்கிலாந்தின் ப்ரீமியா் லீக் கால்பந்து தொடரில் லீட்ஸ் யுனைடெட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் பா்ன்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதனால் லீட்ஸ் அணி தனது ப்ரீமியா் லீக் இருப்பை தக்க வைத்துள்ளது.

டாட்டன்ஹாம் ஹாட்ஸ்புா் அணியை வீட 9 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது லீட்ஸ். நியுகேஸ்ட்ல், நாட்டிங்ஹாம் பாரஸ்ட், வெஸ்ட்ஹாம், அணிகளை விட முன்னணியில் உள்ளது.

ஸ்பானிஷ் லா லிகா தொடரில் மல்லோா்க்கா அணி 1-0 என்ற கோல்கணக்கில் ஜிரோனா அணியை வீழ்த்தியது. அந்த அணியின் சாமு கோஸ்டா முதல் பாதியில் அடித்த கோலே வெற்றி கோலமாக அமைந்தது. ஜிரோனா அணித் தரப்பில் கோலடிக்கும் முயற்சிகள் பலன்தரவில்லை. 15ஆவது இடத்துக்கு முன்னேறியது மல்லோா்க்கா.

Advertisement

இத்தாலியின் சீரி ஏ கால்பந்து தொடரில் லெஸ்ஸி அணி 2-1 என பிஸா அணியை வென்றது. இந்த வெற்றியால் பிஸா, வெரோனா அணிகள் சீரி பீக்கு தகுதி இறக்கம் செய்யப்பட்டன. வெனிஸியா அணி 2-2 என ஸ்பெஸியா அணியுடன் டிரா கண்டது.