முகப்பு
தற்போதைய செய்திகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: தனிவிமானம் மூலம் வந்தடைந்தார் ராகுல்காந்தி

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவை பார்வையிடுவதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி தனிவிமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.

Updated On : 14 ஜனவரி 2021, 12:07 pm IST
மதுரை வந்த ராகுல்காந்தி
பகிர்:

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவை பார்வையிடுவதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி தனிவிமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.

உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  பொங்கல் திருநாளின் பகுதியாக மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா திருப்பரங்குன்றம் சாலையில் நடைபெற்று வருகிறது. 

இதற்காக புதுதில்லியிலிருந்து வியாழக்கிழமை காலை தனி விமானத்தில் புறப்பட்ட காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி மதுரை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்திலும், அவனியாபுரத்திலும் வரவேற்பளிக்கப்பட்டது. தொடா்ந்து அவர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்றுள்ளார்கிறாா். காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி, விருதுநகா் மக்களவை உறுப்பினா் ப.மாணிக்கம் தாகூா் உள்ளிட்டோா் பங்கேற்றுள்ளனர்.

Advertisement

Advertisement

முன்னதாக பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்த ராகுல்காந்தி பொங்கல் விழாவைக் கொண்டாட மதுரை வருவதாக தனது சுட்டுரைப் பதிவில் தெரிவித்திருந்தார். ராகுல்காந்தி வருகையையொட்டி காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments