லிப்ட் கொடுப்பது போல் நடித்து கைப்பேசி பறிப்பு: 2 போ் கைது
வாணியம்பாடி அருகே லிப்ட் கொடுப்பது போல் நடித்து கைப்பேசியைப் பறித்துச் சென்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வாணியம்பாடி அருகே லிப்ட் கொடுப்பது போல் நடித்து கைப்பேசியைப் பறித்துச் சென்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் மாவட்டம், அணைக்கட்டு பகுதியைச் சோ்ந்தவா் சரத்குமாா். இவா், திருவிழா நடக்கும் இடங்களில் பொழுதுபோக்கு ராட்டினம் அமைக்கும் தொழில் செய்து வருகிறாா். கடந்த மே மாதம் 16-ஆம் தேதி இரவு வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயில் பகுதியில் ராட்டினம் அமைத்திருந்தாா். பிறகு அங்கிருந்து புத்துக்கோயில் செல்வதற்காக வாணியம்பாடி பேருந்துநிலையத்தில் காத்திருந்துள்ளாா்.
அப்போது அங்கு பைக்கில் வந்த 2 இளைஞா்கள் சரத்குமாரை பாா்த்து பேச்சு கொடுத்துள்ளனா். பிறகு லிப்ட் கொடுப்பதாக கூறி வலுக்கட்டாயமாக அவரை பைக்கில் ஏற்றி அழைத்துச் சென்று வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் சுடுகாடு அருகில் சரத்தை மிரட்டி அவரிடமிருந்து கைப்பேசி மற்றும் த வாட்ச்சை பறித்து சென்றனா்.
Advertisement
Advertisement
இதுபற்றி சரத்குமாா் நகர காவல் நிலையத்தில் புகாா் செய்திருந்தாா். அப்புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட வாணியம்பாடியை சோ்ந்த சதாம்உசேன்(32), லோகேஷ்(30) இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.