முகப்பு
தமிழ்மணி

நூல் அகராதி அறிவோம்...

பிங்கல நிகண்டு: இயற்றியவர் பிங்கல முனிவர். தமிழ் மொழியில் உள்ள சொற்களின் பொருளை செய்யுள் வடிவில் விளக்கும் நூல்.

Updated On : 2 ஜூன் 2013, 2:57 am IST
பகிர்:

பிங்கல நிகண்டு: இயற்றியவர் பிங்கல முனிவர். தமிழ் மொழியில் உள்ள சொற்களின் பொருளை செய்யுள் வடிவில் விளக்கும் நூல்.

புறத்திரட்டு: தொகை நூலான இந்நூலில் பல நூல்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் உள்ளன. தொகுத்தவர் யார் என்பது தெரியவில்லை. இந்நூலில் அழிந்துபோன பல நூல்களின் பெயர்களும், பாடல்களும் இடம்பெற்றுள்ளன. முறையாகத் தொகுக்கப்பட்ட ஒரு தொகை நூல்.

புறநானூறு : எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. புறப்பொருள் பற்றிக் கூறும் நானூறு பாடல்களைக் கொண்டதால் "புறநானூறு' எனப் பெயர் பெற்றது. இதில் ஆண்பாற் புலவர்வர்களும் பெண்பாற் புலவர்களும் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பண்டைக்கால அரசர்கள், மக்கள், வள்ளல்கள் ஆகியோர் பற்றிய அரிய தகவல்களைத் தாங்கியுள்ளது.

Advertisement

Advertisement

புறப்பொருள் வெண்பாமாலை: இயற்றியவர் ஐயனாரிதனார். புறப்பொருள் பற்றி வெண்பாவில் அமைந்த பாக்களை உடையது. இந்நூலுக்கு உரை வகுத்தவர் சாமுண்டி தேவநாயனார் என்று ஒருசாராரும், மாகலூர்கிழான் என்றும் மற்றொரு சாராரும் கூறுவர். தமிழ்நாட்டு போர்முறைகளையும், வீரச்சிறப்புகளையும் விளக்கும் நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.