போலி உரம் தயாரித்து விற்பனை: 5 பேர் கைது
போலி பொட்டாஷ் உரம் விற்பனை செய்து வந்ததாக, வாணியம்பாடியைச் சேர்ந்த 5 பேரை கர்நாடக போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
போலி பொட்டாஷ் உரம் விற்பனை செய்து வந்ததாக, வாணியம்பாடியைச் சேர்ந்த 5 பேரை கர்நாடக போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
இந்த விவகாரம் குறித்து கர்நாடக மாநில வேளாண்மை அதிகாரி நாகராஜலு ஹாசன் மாவட்டம் பேலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக வேளாண்மைத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியிலிருந்து 10 ஆண்டுகளாக போலியான பொட்டாஷ் மூட்டைகள் விற்பனைக்கு எடுத்து வந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து கர்நாடக போலீஸôர் வாணியம்பாடியில் சில நாள்களாகத் தங்கி விசாரணை நடத்தினர். அப்போது வாணியம்பாடி அருகேயுள்ள பெருமாள்பேட்டை, வளையாம்பட்டு, மல்லக்குப்பம் பகுதிகளில் உள்ள குடோன்களில் போலி பொட்டாஷ் உரம் தயார் செய்யப்படுவது தெரியவந்தது. இதுதொடர்பாக வாணியம்பாடி புதூரைச் சேர்ந்த தேவராஜ், குமார், மூர்த்தி, பெருமாள்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன், பாபு ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் 10 பேரைத் தேடி வருகின்றனர்.