முகப்பு
தமிழ்நாடு

உத்தரகண்ட் மாநிலத்துக்கு விஜயகாந்த் ரூ.10 லட்சம் நிதி

உத்தரகண்ட் மாநிலத்துக்கு நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழங்கியுள்ளார்.

Updated On : 22 ஜூன் 2013, 4:21 am IST
பகிர்:

உத்தரகண்ட் மாநிலத்துக்கு நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புண்ணிய ஸ்தலங்களான கேதர்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி போன்ற இடங்களில் பெய்த பெருமழையினால் கடும் நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக பெரும்பாலானோர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

Advertisement

இந்தப் பேரழிவில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களைக் காத்திடவும், அவர்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடவும் உதவும் வகையில், என் சார்பில் அந்த மாநிலத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.