முகப்பு
தமிழ்நாடு

காலமானார் முனைவர் அ. அய்யூப்

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அய்யூப் கல்வி அறக்கட்டளைத் தலைவரும், உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகப் பொருளாளருமான முனைவர் அ.அய்யூப் (67), தாய்லாந்து நாட்டில் வெள்ளிக்கிழமை (ஜூலை 29) காலமானார்.

Updated On : 30 ஜூலை 2016, 3:14 am IST
பகிர்:

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அய்யூப் கல்வி அறக்கட்டளைத் தலைவரும், உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகப் பொருளாளருமான முனைவர் அ.அய்யூப் (67), தாய்லாந்து நாட்டில் வெள்ளிக்கிழமை (ஜூலை 29) காலமானார்.

மயிலாடுதுறை வட்டம், நீடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனைவர் அ.அய்யூப். தொழிலதிபரான இவர், மயிலாடுதுறையில் தனது பெயரில் கல்வி அறக்கட்டளையை உருவாக்கி ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் கல்விக்கு உதவியவர். மயிலாடுதுறையில் "நம்ம ஊரு செய்தி' என்ற மாத இதழை நடத்தி, பல்வேறு வளர்ச்சிக்கு வழிகாட்டியாகச் செயல்பட்டவர்.

உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகப் பொருளாளர் பொறுப்பில் இருந்தபோது தாய்லாந்து, கொழும்பு, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் தமிழர்களை ஒன்றிணைத்து கருத்தரங்கம், சொல்லரங்கம், பட்டிமன்றம், நூல் வெளியீடு ஆகியவற்றை நடத்தி தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர். 10-க்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதி நவமணி பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளார். உடல் நலக்குறைவால், கடந்த சில தினங்களாக தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், வெள்ளிக்கிழமை காலமானார். இறுதிச் சடங்கு பாங்காக்கில் நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

அய்யூப்புக்கு வாஜிஹா என்ற மனைவியும், 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

இரங்கல் கூட்டம்: இவருக்கான இரங்கல் கூட்டம், மயிலாடுதுறையை அடுத்த மல்லியம், பெஸ்ட் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.