சென்னை அருகே வெட்டிக் கொல்லப்பட்ட திமுக கவுன்சிலர் !
சென்னை தாம்பரம் அருகே உள்ள படப்பையில் திமுக கவுன்சிலர் தனசேகரன் இன்று காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சென்னை: தாம்பரம் அருகே உள்ள படப்பையில் திமுக கவுன்சிலர் தனசேகரன் இன்று காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தாம்பரம் அருகே படப்பையில் கவுன்சிலராக இருப்பவர் தனசேகரன். அவர் இன்று காலை அங்குள்ள ஒரு சர்ச்சிற்கு சென்றுள்ளார். அப்போது 'திடீரென்று' சர்ச்சிற்குள் நுழைந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று தனசேகரனை சரமாரியாக வெட்டி படுகொலை கொலை செய்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிரார்த்தனை செய்வதற்காக சர்ச்சில் கூட்டம் திரண்டிருந்தது. அவர்களுக்கு மத்தியில் நடந்த இந்தக் கொலை அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்காக நாளை தனசேகரன் மனுத்தாக்கல் செய்ய இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடந்துள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.