அந்நியச் செலாவணி மோசடி வழக்கு: டிடிவி தினகரன் நேரில் ஆஜர்
அந்நியச் செலாவணி மோசடி வழக்கின் விசாரணைக்காக ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
அந்நியச் செலாவணி மோசடி வழக்கின் விசாரணைக்காக ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
அந்தியச் செலாவணி மோசடி செய்ததாக, டிடிவி தினகரன் மீது கடந்த 1996 -ஆம் ஆண்டு அமலாக்கத் றை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை, சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் குறுக்கு விசாரணைக்கு டிடிவி தினகரன் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கின் விசாரணை நீதிபதி மலர்மதி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது டிடிவி தினகரன் நேரில் ஆஜரானார். அப்போது அமலாக்கத் துறை முன்னாள் அதிகாரி ஜானகிராமனிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வரும் 11 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.