ஐபிஎல் போட்டிகளை தமிழக இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும்
காவிரி விவகாரத்தில் தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்
காவிரி விவகாரத்தில் தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி. வேல்முருகன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
மதுரையில் அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் முன்னின்று நடத்திய முழு அடைப்பு போராட்டம் முழு வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களை எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
காவிரி விவகாரத்தை முன்னிறுத்தி என்.எல்.சி. நிறுவனம் முன்பாக 150-க்கும் மேற்பட்ட தமிழ்த் தேசிய அமைப்புகளின் சார்பாக மாபெரும் போராட்டம் ஏப்ரல் 10-ஆம் தேதி நடத்தப்படுகிறது. என்.எல்.சி. முன்பாக மட்டுமன்றி, அங்கு பணியாற்றும் பல்வேறு உயர்அலுவலர்களின் வீடுகளின் முன்பாகவும் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதை தடை செய்ய வேண்டும். ஐபிஎல் போட்டிகளை தமிழக இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும். எங்கள் வேண்டுகோளை புறம் தள்ளினால், மைதானத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்துவோம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.