"குரங்கணி தீ விபத்து: விசாரணை அறிக்கை 2 மாதங்களில் சமர்ப்பிக்கப்படும்'
குரங்கணி மலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை தமிழக அரசிடம் எதிர்வரும் இரண்டு மாதங்களில் சமர்ப்பிக்கப்படும் என
குரங்கணி மலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை தமிழக அரசிடம் எதிர்வரும் இரண்டு மாதங்களில் சமர்ப்பிக்கப்படும் என பேரிடர் மேலாண்மைத் துறை அரசு முதன்மைச் செயலரும், விசாரணை அதிகாரியுமான அதுல்ய மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விசாரணைக் கூட்டத்தில் பங்கேற்ற அதுல்ய மிஸ்ரா, குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள், தன்னார்வலர்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தத் தீ விபத்து குறித்து விசாரித்து, அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசு சார்பில் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. குரங்கணி, குடகுமலை பகுதிகளில் மார்ச் 22-ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டு அப்பகுதிகளில் வாழும் குடும்பங்கள், பொதுமக்கள் என 72 பேரிடம் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து, கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்தில் மேற்கொள்ளப்படும் மலை ஏற்றம் எவ்வாறு கையாளப்படுகிறது என்பது குறித்து இந்த ஆணையம் ஆய்வு செய்யும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.