முகப்பு
தமிழ்நாடு

போராட்டக்களமாக மாறி வருகிறது தமிழகம்: தமிழிசை சௌந்தரராஜன்

தமிழகம் போராட்டக்களமாக மாறி வருகிறது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

Updated On : 5 ஏப்ரல் 2018, 1:14 pm IST
பகிர்:

தமிழகம் போராட்டக்களமாக மாறி வருகிறது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகள் இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றன. பல இடங்களில் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று திடீரென சந்தித்தார். தமிழகம் முழுவதும் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநரை சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Advertisement

Advertisement

பின்னர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
தமிழகம் போராட்டக்களமாக மாறி வருகிறது. வன்முறையாக மாற்றுவது தவறு. சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்த பின்னர் தமிழிசை பேட்டி. காவிரி பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதற்குள் சிலர் அரசியலாக்க முயற்சி. காவிரி விவகாரத்தில் தமிழகம் எந்த வகையிலும் வஞ்சிக்கப்படவில்லை என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments