முகப்பு
தமிழ்நாடு

முழு அடைப்புப் போராட்டம்: தமிழகம் - கர்நாடகம் இடையே போக்குவரத்து நிறுத்தம்

தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக தமிழகம் - கர்நாடகம் இடையிலான போக்குவரத்து வியாழக்கிழமை நிறுத்தப்பட்டது.

Updated On : 6 ஏப்ரல் 2018, 1:25 am IST
பகிர்:

தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக தமிழகம் - கர்நாடகம் இடையிலான போக்குவரத்து வியாழக்கிழமை நிறுத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலூரில் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக கூடலூரில் இருந்து கர்நாடகத்துக்குச் செல்லும் பயணிகள் வாகனப் போக்குவரத்து உள்பட அனைத்து வகைப் போக்குவரத்தும் நிறுத்திவைக்கப்பட்டன. 
கர்நாடகத்தில் இருந்து வந்த பயணிகள் பேருந்துகள் உள்பட அனைத்து வாகனங்களையும் கக்கநல்லா பகுதியில் உள்ள கர்நாடக எல்லைக்குள்ளேயே கர்நாடக போலீஸார் தடுத்து நிறுத்தினர். 
அதேபோல, கூடலூர் பகுதியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்குச் செல்லும் பயணிகள் பேருந்துகள் உள்பட அனைத்துப் போக்குவரத்துகளையும் தமிழக எல்லையான தொரப்பள்ளியில் தமிழக போலீஸார் தடுத்து நிறுத்தியதால் இருமாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்து நடைபெறவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments