முகப்பு
தமிழ்நாடு

தேர்தலில் போட்டியிடுவேன்: விஜயகாந்த் மகன்

தேமுதிக தலைவரும், தலைமையும் விரும்பினால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கூறினார்.

Updated On : 26 டிசம்பர் 2018, 1:21 am IST
பகிர்:


தேமுதிக தலைவரும், தலைமையும் விரும்பினால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கூறினார்.
தேமுதிக சார்பில் தண்டையார்பேட்டையில் உள்ள புனித நற்செய்தி அருளப்பர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இதில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், கட்சியின் அவைத் தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்புச் செயலாளர் அழகாபுரம். ஆர்.மோகன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். 
ஏழைகளுக்கு நல உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் விஜய பிரபாகரன் கூறியது:
மக்களவைத் தேர்தல் அறிவித்த பிறகு கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். கட்சித் தலைவரும், கட்சித் தலைமையும் விரும்பினால் எந்தத் தேர்தலிலும் போட்டியிடுவேன். தேர்தலில் போட்டியிட எந்தப் பயமும் எனக்கு இல்லை. என் வருகையால் கட்சிக்குள் எந்தக் குழப்பம் இல்லை. என்னுடைய வளர்ச்சிக்கு எல்.கே.சுதீஷ் பக்கபலமாக உள்ளார். எனக்கும் அவருக்கும் பிரச்னை உள்ளதாக வரும் செய்திகள் வெறும் வதந்திதான் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments