முகப்பு
தமிழ்நாடு

தூத்துக்குடியில் போலீஸ் ராஜ்ஜியம் நடக்கிறதா?: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபலகவுடா

தூத்துக்குடியில் போலீஸ் ராஜ்ஜியம் நடக்கிறதா என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபலகவுடா கேள்வி எழுப்பி உள்ளார்.

Updated On : 23 ஜூலை 2018, 8:35 am IST
பகிர்:

தூத்துக்குடி: தூத்துக்குடியில் போலீஸ் ராஜ்ஜியம் நடக்கிறதா என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபலகவுடா கேள்வி எழுப்பி உள்ளார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற மக்கள் விசாரணைக் குழு அறிக்கை வெளியீட்டு விழாவில் பங்கேற்று அவா் பேசியதாவது: இங்கு நடப்தை போல் ஒரு போலீஸ் அதிகாரத்தை நான் எங்கும் பார்த்ததில்லை. போலீஸுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார்? 70 ஆண்டு கால சுதந்திரத்தில் இதுபோல் ஒரு அடக்குமுறையை கண்டதில்லை. 

இந்த துப்பாக்கி சூடு நடத்தியது தவறு. அனைத்து தரப்பு மக்களும் இதனால் பாதிக்கப்பட்டனா். இது சுதந்திர நாடுதானா. அல்லது போலீஸ் ராஜ்யமா? முதல்வா் பதில் அளிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

ஜாலியன் வாலாபாக் போன்ற நிகழ்வு இங்கு நடந்துள்ளது. அனைத்து தரப்புகளும் இங்கு சாட்சிகளாக உள்ளது. இது போன்று அழுத்தங்கள் ஏற்று கொள்ளமுடியாது. 

துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? மாவட்ட ஆட்சியரா? இது குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கவேண்டும். மக்கள் மீதான அழுத்தங்களை நெருக்கடிகளை உடனடியாக தமிழக அரசு கைவிட வேண்டும். இல்லையேல் இதன் விளைவுகளை தமிழக அரசு சந்திக்க வேண்டியது இருக்கும்.

மக்களுக்கு தற்போது உள்ள நிலை இது சுதந்திர நாடு தானா என சந்தேகம் உள்ளது. சமூக விரோதிகளால் ஏற்படாத பிரச்னைகளா? பொதுமக்களால் நிகழ போகிறது? இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவு கொடுத்தது யார்? துப்பாக்கி சூட்டுக்கு பிறகு ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. மிருகங்களை தாக்குவது போல் பொதுமக்களை தாக்கியுள்ளனா். மக்கள் கொடுத்த புகார்கள் என்ன ஆனது? பதிவு செய்யப்பட்ட முத்ல தகவல் அறிக்கைகள் 2 பகுதிகளாக உள்ளது. 

இந்த சம்பவத்தின் போது மத்திய, மாநில அரசுகள் என்ன செய்தன. சாதாரண உடையில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்துவது எப்படி நியாமாகும்? பொதுமக்கள் என்ன தீவிரவாதிகளா, நக்சல்களா? இங்கு போலீஸ் நடத்தியது எல்லாம் சட்ட விரோதச் செயல்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments