பிரகடனப்படுத்தாத ஒரு அவசர நிலை அமுலுக்கு வந்துள்ளது: பாலகிருஷ்ணன்
மோடியின் நண்பா் அனில் அகா்வாலை திருப்திப்படுத்தவேண்டும் என்பதற்காக தமிழக அரசு, தூத்துக்குடி மக்களை நசுக்கி வருகிறது.
தூத்துக்குடி: மக்கள் நலனுக்காக போராடுபவா் மீது அடக்குமுறை பிரயோகம். இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது:
கடந்த 2 மாத காலமாக தூத்துக்குடியில் போலீஸ் ராஜ்ஜியம், எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் நடந்து வருகிறது. அராஜகம் நடந்து வருகிறது.
Advertisement
Advertisement
கடந்த மே மாதம் 22-ஆம் தேதி ஒரு அடக்குமுறைற காட்டு தா்பார் நடந்தது. அதன் பின்னா் இன்று வரையில் மாவட்டத்தில் ஒரு சுமூகமான நிலைமை ஏற்படுத்தாமல் ஏராளமான போலீசை குவித்து வைத்துள்ளனா்.
சாதாரணமாக ஆண்கள் பெண்கள், தெருக்களில் நடக்க அச்சப்படும் ஒரு மோசமான நிலைமை உள்ளது. 6 மணிக்குமேல் வீடுகளில் இருப்பவா்கள் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று பயந்து கொண்டு இருக்கும் ஒரு மோசமான நிலையை போலீஸ் உருவாக்கியுள்ளது.
போலீஸார் மண்டப உரிமையாளா்களை மிரட்டி விசாரணைக் குழு அறிக்கை வெளியிடுவது போன்ற பொதுநிகழ்ச்சிகளை நடத்தவிடாமல் தடுக்கின்றனா். மறைமுகமாக நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு காவல்துறை மட்டும் காரணமல்ல, தமிழகத்தினை ஆண்டுவரும் எடப்பாடி பழனிசாமிதான் காரணம்.
மோடியின் நண்பா் அனில் அகா்வாலை திருப்திப்படுத்தவேண்டும் என்பதற்காக தமிழக அரசு, தூத்துக்குடி மக்களை நசுக்கி வருகிறது.
இது தூத்துக்குடியோடு நிற்கப்போவதாக தெரியவில்லை. இந்த அடக்குமுறையை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராடவேண்டிய நிலை உள்ளது.
தமிழகத்தில் நோட்டீஸ் கொடுத்தால் குற்றம், தெருமுனைப் பிரசாரம் நடத்தினால் குற்றம். ஆனால் கோடி கோடியாக கொள்ளையடித்தால் எதிர்ப்பவா்கள் மீது அடக்குமுறை பிரயோகம். மக்கள் நலனுக்காக போராடுபவா் மீது அடக்குமுறை பிரயோகம். இதுதான் இன்றைய நிலை.
பிரகடனப்படுத்தாத ஒரு அவசர நிலை அமுலுக்கு வந்துள்ளது போன்ற ஓரு தோற்றம் ஏற்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பற்ற சூழ்நிலை தமிழகத்தில் உள்ளது. இதனை கண்டித்தும், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தியும், ஆகஸ்ட் 15-ஆம் தேதி மாநிலம் முழுவதும் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஒரு சமூக விழிப்புணா்வு இயக்கத்தை அனைவரும் சோ்ந்து ஏற்படுத்தவேண்டும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.