முகப்பு
தமிழ்நாடு

பீடி, சுரங்கம், சினிமா தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை

பீடி, சுரங்கம், சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. 

Updated On : 24 ஜூலை 2018, 4:52 am IST
பகிர்:

பீடி, சுரங்கம், சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. 
இது குறித்து அந்த அமைச்சகம் வெளியிட்ட செய்தி: மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின்கீழ் பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை ரூ.250 முதல் ரூ.15 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
இந்த உதவித்தொகை பெறுவதற்காக மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.
scholarships.gov.in  என்கிற தேசிய கல்வி உதவித்தொகை வலைதளத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 23-ஆம் தேதி முதல் மாணவர்கள் சமர்ப்பிக்கலாம். 
இந்தத் திட்டத்துக்கு கல்வி நிறுவனங்களின் தலைவர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். பதிவு செய்யப்படாத பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை வலைதளத்தில் முதலில் பதிவு செய்தல் வேண்டும். பின்னர் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி அனைத்து விண்ணப்பங்களையும் ஆராய்ந்து, ஒப்புதல் வழங்கி தங்களது கல்வி நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சமர்ப்பிக்க வேண்டும். வரும் அக்.31-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும்.
இது குறித்து மேலும் தகவல் பெற நல ஆணையர் அலுவலகம், தொழிலாளர் நல அமைப்பு, 8-2ஏ செயின்ட் தாமஸ் சாலை, மேட்டு திடல், பாளையங்கோட்டை, திருநெல்வேலி-627011' என்ற முகவரி, scholarship201718tvl@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரி, 0462-2578266 என்ற தொலைபேசி எண் ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments