முகப்பு
தமிழ்நாடு

போக்குவரத்துக் காவல்துறையால் போதிய தண்ணீரின்றி புறப்படும் விரைவு ரயில்கள்

சென்னை நகரத்துக்குள் காலை 8 மணியில் இருந்து மதியம் வரை குடிநீர் லாரிகள் நுழையக் கூடாது என்ற போக்குவரத்துக் காவல்துறையின் அதிரடி உத்தரவால் சில விரைவு ரயில்கள் போதிய நீர் வசதி இன்றி புறப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Updated On : 23 ஜூலை 2018, 3:44 pm IST
பகிர்:

சென்னை: சென்னை நகரத்துக்குள் காலை 8 மணியில் இருந்து மதியம் வரை குடிநீர் லாரிகள் நுழையக் கூடாது என்ற போக்குவரத்துக் காவல்துறையின் அதிரடி உத்தரவால் சில விரைவு ரயில்கள் போதிய நீர் வசதி இன்றி புறப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களாக, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் 11 விரைவு ரயில்கள் போதிய நீர் இன்றி அல்லது ஒரு சொட்டுத் தண்ணீரும் இல்லாமல் புறப்படுகின்றன.

கன்னியாகுமரி - ஹஸ்ரத் நிஜாமுதீன் திருக்குறள் விரைவு ரயில், மதுரை - ஹஸரத் நிஜாமுதீன் சம்பர்க் கிரந்தி விரைவு ரயில், வைகை விரைவு ரயில், பல்லவன் விரைவு ரயில் போன்றவற்றில் கழிவறையைப் பயன்படுத்தக் கூட தண்ணீர் இல்லாமல் பயணிகள் அவதிப்பட்டனர்.
 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments