முகப்பு
தமிழ்நாடு

வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதி கலன் குழாய் பழுது: 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு 

வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில், ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

Updated On : 24 ஜூலை 2018, 2:28 am IST
பகிர்:

வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில், ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
வடசென்னை அனல் மின் நிலையத்தில் முதல் நிலையில் உள்ள 3அலகுகளில் தலா 210 மெகாவாட்,, இரண்டாம் நிலையில் உள்ள 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆக மொத்தம் வடசென்னை அனல் மின் நிலையத்தில் உள்ள 2 நிலைகளில் மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 
இந்நிலையில், இங்குள்ள 2-ஆவது நிலையில் இருக்கும் முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதில், ஏற்கெனவே பராமரிப்பு பணி காரணமாக 1-ஆவது நிலையில் உள்ள 2-ஆவது அலகில் 210மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், மொத்தம் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கொதி கலன் குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை சீரமைக்கும் பணியில் மின் நிலைய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments