முகப்பு
தமிழ்நாடு

கல்குவாரி அதிபரின் வீட்டில் இருந்து 280 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

கரூர் மாவட்டம் புன்னம் அருகே கல்குவாரி அதிபர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 280 ஜெலட்டின் குச்சிகளையும், 700 மீ. திரிகளையும் போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்

Updated On : 6 நவம்பர் 2018, 1:15 am IST
பகிர்:


கரூர் மாவட்டம் புன்னம் அருகே கல்குவாரி அதிபர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 280 ஜெலட்டின் குச்சிகளையும், 700 மீ. திரிகளையும் போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
புன்னம்சத்திரத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (42). இவர் அதே பகுதியில் கல்குவாரி நடத்தி வருகிறார். இதனிடையே வீட்டில் ஜெலட்டின் குச்சிகளை பதுக்கி வைத்திருப்பதாக வேலாயுதம்பாளையம் போலீஸாருக்கு திங்கள்கிழமை காலை தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் தர்மலிங்கம் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு குவாரியில் பாறைகளை வெடிவைத்து தகர்க்கப் பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகள் 280 மற்றும் 700 மீ. திரி ஆகியன இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார் தர்மலிங்கம் மீது வீட்டில் வெடிப் பொருள்களை வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments