காலமானார்: தமிழ்மாமணி பாவலர் மணி சித்தன்
புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் தமிழ்மாமணி பாவலர் மணி சித்தன் (எ) ராதாகிருஷ்ணன் (98) ஞாயிற்றுக்கிழமை (நவ.4) காலமானார்.
புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் தமிழ்மாமணி பாவலர் மணி சித்தன் (எ) ராதாகிருஷ்ணன் (98) ஞாயிற்றுக்கிழமை (நவ.4) காலமானார்.
புதுச்சேரி புஸ்ஸி வீதி-மிஷன் வீதி சந்திப்பில் வசித்து வந்த இவர், உடல்நலக் குறைவு காரணமாக ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
பாவேந்தர் பாரதிதாசனின் சீடரான இவர், அவரது குயில் பத்திரிகையில் முக்கியப் பங்காற்றினார்.
தொடக்க காலத்தில் பல் மருத்துவராகப் பணியாற்றிய ராதாகிருஷ்ணன், பின்னர் இலக்கியப் பணியில் ஈடுபட்டார். நாலாயிர திவ்விய பிரபந்தத்தை நன்கு அறிந்தவர். 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். ஜீயர் சுவாமிகளால் வைணவ செம்மல் என்ற பட்டம் பெற்றார்.
புதுச்சேரியில் நடைபெறும் கம்பன் விழாவில் இவரது அறக்கட்டளை சார்பில் சிறப்பு நிகழ்ச்சி இடம் பெறும். இவரது உடல் புதுச்சேரியில் திங்கள்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
தொடர்புக்கு....98425 34057
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.