தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பரபரப்பு: சிறப்பு ஆசிரியர் தேர்வு பட்டியலில் முறைகேடு புகார்!
சிறப்பாசிரியர்களை நியமிக்கும் இறுதி கட்ட பணிகளில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டுள்ள நிலையில் சிறப்பு ஆசிரியர் தேர்வில்
சென்னை: சிறப்பாசிரியர்களை நியமிக்கும் இறுதி கட்ட பணிகளில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டுள்ள நிலையில் சிறப்பு ஆசிரியர் தேர்வில் ஆதாரத்துடன் எழுந்துள்ள முறைகேடு புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர் பணி இடங்கள் காலியாக இருந்தது. இந்த காலிப் பணி இடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 2017 செப்டம்பர் மாதம் எழுத்துத்தேர்வை நடத்தியது. இந்த் தேர்வில் 200 பேர் தில்லுமுல்லு செய்து, அதிக மதிப்பெண் பெற்றதாக புகார்கள் எழுந்தபோது தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து புகார்கள் குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முறைகேடு நடந்தது உறுதியானதையடுத்து, சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீஸார், மோசடி வழக்குப்பதிவு செய்து, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில், சிறப்பு ஆசிரியர் தேர்வில் முறைகேடு நடந்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது. பலர் தங்களது ஜாதியை மாற்றி தேர்வு பட்டியலில் இடம் பிடித்துள்ளதாக முறைகேடு புகார் எழுந்துள்ளது. பணி நியமன ஆணைகள் தயாராகிவரும் நிலையில் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகள் கூறபட்டுள்ளன.
1085 சிறப்பாசிரியர்களை நியமிக்கும் இறுதி கட்ட பணிகளில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டுள்ள நிலையில் ஆதாரத்துடன் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.