போதைப் பொருள் கடத்தல்: நைஜீரிய இளைஞருக்கு 10 ஆண்டு சிறை
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த கொகைன் போதைப் பொருளை வீட்டில் வைத்து விற்பனை செய்த நைஜீரிய நாட்டு இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த கொகைன் போதைப் பொருளை வீட்டில் வைத்து விற்பனை செய்த நைஜீரிய நாட்டு இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கொகைன் போதைப் பொருளை கடத்தி வந்து விற்பனை செய்வதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
இதுதொடர்பாக போலீஸார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். அப்போது எர்ணாவூர், ராமகிருஷ்ண நகரில் வீட்டில் வைத்து போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவது போலீஸாருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து அந்த வீட்டில் இருந்த இசுபா அகஸ்டீன் சிபுகி என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த பல லட்சம் மதிப்புள்ள கொகைன் போதைப் பொருளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு, சென்னையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் அரசு சிறப்பு வழக்குரைஞர் என்.பி குமார் ஆஜராகி வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.சந்திரன், குற்றஞ்சாட்டப்பட்ட நைஜீரியாவைச் சேர்ந்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.