இடைத்தேர்தல் அறிவிக்காததற்கு தேர்தல் ஆணையம் கூறும் காரணம் வினோதமாக உள்ளது: டிடிவி தினகரன்
இடைத்தேர்தல் அறிவிக்காததற்கு தேர்தல் ஆணையம் கூறும் காரணம் வினோதமாக உள்ளது என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் அறிவிக்காததற்கு தேர்தல் ஆணையம் கூறும் காரணம் வினோதமாக உள்ளது என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
திருப்பரங்குன்றத்தில் மழைக்காலத்தில் ஏற்கெனவே இடைத்தேர்தல் நடந்துள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்காததற்கு தேர்தல் ஆணையம் கூறும் காரணம் வினோதமாக உள்ளது. வானிலை மையம் அரசியல் செய்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
திடீர் என்று ரெட் அலர்ட் விட்டார்கள். நேற்று சென்னையில் மழையே இல்லை. இடைத்தேர்தல் நடந்தால் அதிமுகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது. இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்று தலைமைச் செயலர் மூலம் கடிதம் எழுதியுள்ளனர். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை சந்திக்க திமுக பயப்படுகிறது. தற்போதைய அரசு, மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை எனவும் விமர்சித்தார்.
Advertisement
Advertisement
நாட்டில் ஜனநாயக ஆட்சி நடக்கிறதா, இல்லை அதிபர் ஆட்சி நடைபெறுகிறதா என்பது தெரியவில்லை. கல்வித்துறையில் நிறைய புகார் வருவதாக அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் தெரிவித்தார். சாஸ்த்ரா பல்கலைக்கழகம் 59 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. அதுவே அரசு நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்தால் குண்டாஸே போடுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.