ராமேசுவரம் மீனவர்கள் 19 பேர் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 19 பேர் திங்கள்கிழமை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 19 பேர் திங்கள்கிழமை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ராமேசுவரத்தில் இருந்து சனிக்கிழமை மீன் பிடிக்கச் சென்றபோது 3 விசைப்படகுகளையும் அதில் இருந்த 19 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். கடற்படையினர் தாக்கியதில் மீனவர் ஒருவர் காயமடைந்தார். இந்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்து திங்கள்கிழமை 11 பேரை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் 21 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் 8 மீனவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 23-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.