சித்த மருத்துவர் தணிகாசலம் மீது மேலும் இரண்டு வழக்கு
சித்த மருத்துவர் தணிகாசலம் மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சித்த மருத்துவர் தணிகாசலம் மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனை நடத்தி வந்த சித்த மருத்துவா் தணிகாசலம், கரோனா நோய்த்தொற்றுக்கு தான் மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும், தமிழக முதல்வா் அனுப்பிய இருவருக்கு சிகிச்சையளித்து நோயைக் குணப்படுத்தியதாகவும் சமூக ஊடகங்களில் கூறும் காட்சிகள் பரவியது.
இதனைத் தொடா்ந்து உலக சுகாதார நிறுவனம் மற்றும் தமிழக முதல்வருக்கு எதிராக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பியதாக, தணிகாசலம் மீது வழக்குப்பதிவு செய்த சைபா் குற்றத் தடுப்பு காவல்துறையினர் அவரை கைது செய்தனா். இந்த வழக்கை விசாரித்த எழும்பூா் நீதிமன்றம், தணிகாசலத்தை வரும் 20- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.
Advertisement
Advertisement
சித்த மருத்துவர் தணிகாசலம் மீது ஏற்கனவே 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே ஜாமீன் கோரி தணிகாசலம் தாக்கல் செய்த மனுவை எழும்பூா் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.