'சட்டப்பேரவைத் தேர்தலில் அந்தணர்களுக்கு 5 இடங்களை வழங்க வேண்டும்'
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஐந்து இடங்களை அந்தணர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஆர்.எம்.ஆர். பாசறை மற்றும் அந்தணர் முன்னேற்ற கழக கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஐந்து இடங்களை அந்தணர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஆர்.எம்.ஆர். பாசறை மற்றும் அந்தணர் முன்னேற்ற கழக கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தணர் முன்னேற்ற கழகம் மற்றும் ஆர்.எம்.ஆர். பாசறை கூட்டமைப்பு சார்பில் திருச்செந்தூர் ஸ்ரீ கிருஷ்ண மஹாலில் வைத்து மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டிற்கு தலைமை வகித்து, முன்னாள் தமிழக தலைமைச் செயலாளரும், ஆர்.எம்.ஆர். பாசறை நிறுவனருமான ராம மோகன் ராவ் பேசினார்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சிக்கு அந்தணர் முன்னேற்ற கழக நிறுவனர் ராஜாளி ஜெயப்பிரகாஷ் ஐயர், பொதுச்செயலாளர் பாலாஜி ஆதிரேயா, மாநில பொருளாளர் மணிகண்டன் சிவாச்சாரியார், மாநில கொள்கை பரப்பு செயலாளர் கார்த்திக் சிவம், மாநில மாணவரணி செயலாளர் நிவர்த்தி பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் உள்ளது போல் தமிழகத்திலும் அந்தணர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும்.
வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் அந்தணர்களுக்கு 5% இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் கடவுள் மறுப்பு, இந்து தெய்வங்கள் அவமதிப்பு செய்பவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
திரைப்படம், சின்னத்திரை போன்றவற்றில் கலாசாரம் மற்றும் பிராமணர்களை இழிவுபடுத்துவதை தணிக்கை செய்து விடும் வகையில் அந்தணர் ஒருவரை தணிக்கை குழுவில் நியமிக்க வேண்டும்.
அறநிலையத்துறையில் 25% பணியினை அந்தணர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது .
நிகழ்ச்சியில் அந்தணர் முன்னேற்ற கழக தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் கிருஷ்ணன், தொகுதிச் செயலர் கணபதி, பொருளாளர் பரமேஸ்வரன், தொகுதி அமைப்பாளர் அரசப்பன், தொகுதி துணை தலைவர் ஈஸ்வரன், கொள்கைபரப்பு செயலாளர்கள் ஈஸ்வரன், மணிகண்டன், ஆன்மீக அணி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தொண்டரணி செயலாளர் முத்து சுப்ரமணியன், தொகுதி செய்தித்தொடர்பாளர் நாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் ராமன், தொகுதி இளைஞரணி செயலர் ரவிசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக திருச்செந்தூர் தொகுதி தலைவர் சங்கர் ஐயர் வரவேற்புரையாற்றினார். முடிவில் தொகுதி தேர்தல் குழு செயலர் ரவி முத்து நன்றி கூறினார்.