முகப்பு
தமிழ்நாடு

அடிப்படை வசதிகள் கோரி செங்கனூர் கிராம மக்கள் உள்ளிருப்புப் போராட்டம்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள செங்கனூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் கோரி ஊர் பொதுமக்கள் கருப்புக் கொடி கட்டி அம்மன் கோவிலில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 5 ஜனவரி 2021, 11:34 am IST
செங்கானூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் கோரி முப்புடாதி அம்மன் கோயிலில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள்.
பகிர்:

அம்பாசமுத்திரம்: தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள செங்கனூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் கோரி ஊர் பொதுமக்கள் கருப்புக் கொடி கட்டி அம்மன் கோவிலில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்டது செங்கானூர் கிராமம். இங்கு சுமார் 300 வீடுகளில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு இதுவரை  அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் ஓடை, பொதுக்கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் இல்லை. மேலும் இந்த கிராமத்திற்கு ஆழ்வார்குறிச்சியில் இருந்து வரும் வழியில் ரயில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதால் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இதைத்தொடர்ந்து அடிப்படை வசதிகள் கோரியும், மாற்றுப்பாதை அமைத்துக்தரக் கோரியும் கிராம மக்கள் அனைவரும் தங்களது வாக்காளர் அட்டையை ஆளுநரிடம் ஜன.5இல் ஒப்படைப்பதாக அறிவித்தனர். ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்காததை எடுத்து இன்று செங்கனூர் கிராமத்திலுள்ள முப்புடாதியம்மன் கோவிலில் கிராம மக்கள் அனைவரும் திரண்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Advertisement

Advertisement

அவர்களிடம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் சாந்தி, கடையம் காவல் ஆய்வாளர் ரெகுராஜன், ஆழ்வார்குறிச்சி வருவாய் ஆய்வாளர் மனோகரன் மற்றும் அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.