போகி பண்டிகை: சென்னையில் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி
போகி பண்டிகையையொட்டி சென்னையில் பல்வேறு இடங்களில் மக்கள் தேவையற்ற பொருள்களை எரித்ததால் புகை மூட்டம் காணப்பட்டது.
போகி பண்டிகையையொட்டி சென்னையில் பல்வேறு இடங்களில் மக்கள் தேவையற்ற பொருள்களை எரித்ததால் புகை மூட்டம் காணப்பட்டது.
மார்கழி மாதத்தின் இறுதி நாளான இன்று போகி பண்டிகையை தமிழகம் முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்பதற்கேற்ப மக்கள் வீட்டை சுத்தம் செய்து இன்று அதிகாலை முதல் தேவையற்ற பொருள்களை தீயிட்டுக் கொளுத்தினர்.
- போகி பண்டிகையின்போது ஏற்படும் புகைமூட்டத்தைத் தவிர்க்க, பொருள்களை எரிக்க வேண்டாம் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்டவை மக்களுக்கு அறிவுறுத்தி இருந்தும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மக்கள் தேவையற்ற பொருள்களை ஆங்காங்கே எரித்ததால் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. ஏற்கனவே சென்னையில் இன்று காலை பனிமூட்டமும் அதிகமாக இருந்தது. புகைமூட்டமும் அதிகரித்து காணப்பட்டதால் சென்னையில் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.