முகப்பு
தமிழ்நாடு

குற்றாலம் பேரருவியில் 2 ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து 2 ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 13 ஜனவரி 2021, 11:20 am IST
குற்றாலம் பேரருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்.
பகிர்:

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து 2 ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் பேரருவியில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம் பேரருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் ஐந்தருவி, புலியருவியில் குளித்து மகிழ்ந்தனர். செவ்வாய்க்கிழமை இரவு தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து குற்றாலம் பேரருவியில் 2 ஆவது நாளாக புதன்கிழமை குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments