சசிகலாவை சேர்த்துக் கொள்ள வேண்டும்: அதிமுகவிற்கு ஆடிட்டர் குருமூர்த்தி அட்வைஸ்
திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் சசிகலாவை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுகவிற்கு ஆடிட்டர் குருமூர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை: திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் சசிகலாவை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுகவிற்கு ஆடிட்டர் குருமூர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவில் அப்பத்திரிக்கையின் ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதாவது:
அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக நல்ல வளர்ச்சி அடையும்
Advertisement
Advertisement
முதல்வர் பழனிசாமிக்கு ஆளுமை உள்ளது; அதிமுக இல்லை என்றால் தமிழகத்தில் ஆன்மிகமும், தேசியமும் இருந்திருக்காது.
யார் தேசியத்தை விரும்புகிறார்களோ அவர்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க விரும்பும் சூழல் தற்போது உள்ளது.
திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் சசிகலா போன்றவர்களையும் அதிமுக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.