தமிழ்நாட்டில் வரும் காலத்தில் பாஜகதான்: தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா
தமிழ்நாட்டில் வரும் காலத்தில் பாஜகதான் பிரதானமாக இருக்கும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பேசியுள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் வரும் காலத்தில் பாஜகதான் பிரதானமாக இருக்கும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பேசியுள்ளார்.
சென்னையில் பாஜக சார்பாக நடைபெறும் பொங்கல் விழா மற்றும் துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பாஜகவின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஞாயிறன்று சென்னை வந்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவில் அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டில் வரும் காலத்தில் பாஜகதான் பிரதானமாக இருக்கும்; அதனால்தான் பல்வேறு துறையினர் தற்போது பாஜகவில் ணைகிறார்கள்.;
Advertisement
Advertisement
வளர்ச்சிப் பாதையில் தமிழகம் முன்னோக்கி செல்வதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்
தமிழகம் ஆன்மிக பூமி, உலகிலேயே மிகப் பழமையான மொழி தமிழ்.
திருவள்ளுவர் மிகப்பெரிய ஆசான்; அவரது புகழ் நாட்டின் அனைத்து இடங்களிலும் பரவியுள்ளது.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.