முகப்பு
தமிழ்நாடு

தமிழர் வீர விளையாட்டைக் காண ராகுல் வருவதில் மகிழ்ச்சி: செல்லூர் ராஜு

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை காண காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வருவதில் மகிழ்ச்சி

Updated On : 14 ஜனவரி 2021, 9:51 am IST
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு (கோப்புப்படம்)
பகிர்:

மதுரை: தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை காண காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வருவதில் மகிழ்ச்சி என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை இன்று காலை 8.10 மணியளவில் அமைச்சர் செல்லூர் ராஜு கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனா காரணமாக ஜல்லிக்கட்டு நடக்குமா நடக்காதா என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் குழப்பத்தில் இருந்த நேரத்தில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடந்த முதல்வரும், துணை முதல்வரும் அனுமதி கொடுத்தனர். 

Advertisement

Advertisement

தேசிய கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழரின் பாரம்பரிய விளையாட்டை பார்க்க வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. 

தமிழத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் தேசிய தலைவர்கள் யார் வேண்டுமானாலும் தமிழகத்திற்கு வந்து செல்ல முடிகிறது.

தேர்தல் நேரத்தில் சிலர் ஏன் விளையாட்டை பார்க்க வருகின்றனர் என்பது மக்களுக்கு தெரியும். அரசியல்  உள்நோக்கத்துடன் விளையாட்டை அணுக கூடாது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments