ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகுதிகளில் வெகு விமர்சையாக மாட்டுப்பொங்கல் விழா
சேலம் மாவட்டம், ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகுதிகளில் தைத் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை முதலே மாட்டு பொங்கல் தங்களது விவசாய நிலத்தில் கொண்டாடப்பட்டது.
சேலம் மாவட்டம், ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகுதிகளில் தைத் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை முதலே மாட்டு பொங்கல் தங்களது விவசாய நிலத்தில் கொண்டாடப்பட்டது.
இதில், நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வெகு குத்தரிசியில் பொங்கலிட்டு, செங்கரும்பு உள்ளிட்ட பூஜை பொருள்களை வைத்து வெகு விமர்சையாக கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில், வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே விவசாயிகள் மாடு, ஆடு மற்றும் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை வண்ண பொடிகளால் அலங்காரம் செய்து, மாட்டு சாணத்தால் பிள்ளையார் சிலை வடிவமைத்து சூரியனை வணங்கினர்.
Advertisement
Advertisement
மேலும் தங்களுடைய விவசாய நிலத்தில் மும்மாரி மழை பெய்து முப்போகம் விளைச்சல் தர மாட்டு சாணத்தால் அலங்கரித்த பிள்ளையார் மீது பசுக்களை நடக்க விட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.