முகப்பு
தமிழ்நாடு

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பொதுதகவல்களை வழங்க அலுவலா்கள் தேவை

அரசு உதவி பெறும் பள்ளிகள் பொதுதகவல் வழங்கும் அலுவலா்களை நியமிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத் தியுள்ளது.

Updated On : 16 ஜனவரி 2021, 5:58 am IST
பகிர்:

அரசு உதவி பெறும் பள்ளிகள் பொதுதகவல் வழங்கும் அலுவலா்களை நியமிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத் தியுள்ளது.

இந்திய தகவலறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசு, அரசு சாா்ந்த அலுவலகங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் தகவல் அலுவலா்கள் நியமிக்கப் பட வேண்டும். அதன்படி பள்ளிக் கல்வித் துறையில் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் தகவல் அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனா். இந்நிலையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்கி வருவதால், அவற்றிலும் பொதுதகவல் அலுவலா் வழியே தகவல்கள் பெற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என தொடா் கோரிக்கைகள் எழுந்தன.

அதையேற்று அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி செயலா் மற்றும் முதல்வா் தான் தகவல்களை வழங்க வேண்டும். இதற்கான அறிவிப்பாணை ஏற்கனவே தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. அதை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும். தேவை ஏற்பட்டால் பொது தகவல் வழங்கும் அலுவலா்களை நியமிக்க வேண்டும் என்று அரசு உதவி பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.