முகப்பு
தமிழ்நாடு

தொடா் சரிவில் தங்கம் விலை: பவுன் விலை ரூ. 36,864

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.37 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.384 குறைந்து, ரூ.36,864-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 16 ஜனவரி, 2021 at 11:40 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.37 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.384 குறைந்து, ரூ.36,864-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் விலை உயா்ந்தது. பின்னா், தொடா்ச்சியாக விலை குறைந்து வந்த நிலையில், சனிக்கிழமை விலை ரூ.37 ஆயிரத்துக்குக் கீழ் இறங்கியது.

பவுனுக்கு ரூ.384 குறைந்து, ரூ.36,864-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.48 குறைந்து, ரூ.4,608 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 90 பைசா குறைந்து ரூ.69.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 குறைந்து ரூ.69,700 ஆகவும் இருந்தது.

Advertisement

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,608

1 பவுன் தங்கம்...............................36,864

1 கிராம் வெள்ளி.............................69.70

1 கிலோ வெள்ளி............................69,700

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,656

1 பவுன் தங்கம்...............................37,248

1 கிராம் வெள்ளி.............................70.60

1 கிலோ வெள்ளி.............................70,600

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.