1, 2 வகுப்புகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது: பள்ளிக்கல்வித் துறை
1 மற்றும் 2 வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை: 1 மற்றும் 2 வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற தடையை செயல்படுத்த வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
வீட்டுப்பாடம் தரப்படுகிறதா என்பதை பள்ளிகளில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வீட்டுப்பாடம் தரப்படுவதில்லை என்பதை பறக்கும் படையினர் ஆய்வு செய்து உறுதி செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.