முகப்பு
தமிழ்நாடு

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்க கோரிய வழக்கு முடித்துவைப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:36 PM
பகிர்:

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. 

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழக அரசு, குடும்ப அட்டைதாரா்களுக்கு பச்சை அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருள்களுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி வந்தது. இந்நிலையில் 2023-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு, ஆயிரம் ரூபாயுடன், அரிசி, சா்க்கரை உள்ளிட்ட பொருள்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு, டிச. 22-இல் அறிவித்தது. ஜனவரி முதல் வாரத்தில் இருந்து விநியோகிக்கப்பட உள்ள இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம் பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். 

இந்நிலையில் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி கடலூா் மாவட்டம், மதனகோபாலபுரத்தைச் சோ்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தார். பொங்கல் பண்டிகையையும், கரும்பையும் பிரிக்க முடியாது என்பதால், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்கக் கோரி டிசம்பா் 24-ஆம் தேதி அரசுக்கு மனு அளித்ததாகவும், அதை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். இம்மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அரசின் விளக்கத்தை ஏற்று வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்தது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.