முகப்பு
தமிழ்நாடு

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சம்மன்!

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் நேரில் ஆஜராக வருமானவரித் துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

Updated On : 10 அக்டோபர் 2023, 5:12 pm IST
பகிர்:

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் நேரில் ஆஜராக வருமானவரித் துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

மத்திய முன்னாள் இணை அமைச்சரும் அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினரான எஸ்.ஜெகத்ரட்சகன் நடத்தும் நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வந்த புகாா்களின் அடிப்படையில் கடந்த வியாழக்கிழமை முதல் அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினா் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீடுகள், நிறுவனங்கள், தொடா்புடைய நிறுவனங்கள், அவரது உறவினா்கள், நண்பா்களின் வீடுகள் என சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, திருவள்ளூர், திருப்பூர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

Advertisement

Advertisement

தொடர்ந்து 6 ஆவது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இந்த சோதனையில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ரூ. 1,050 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எனவே, இதுதொடர்பாக வருகிற அக். 14 ஆம் தேதி ஜெகத்ரட்சகன் விசாரணைக்கு நேரில் ஆஜராக வருமானவரித் துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments